Preview Mode Links will not work in preview mode

Creative Disturbance


Dec 5, 2019

அ முதல் அமெரிக்காவரை ! புதிதாக MS-முதுநிலை அறிவியல் படிக்க இந்த ஆண்டு அமெரிக்கா வரும் தமிழ் மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி. இது நான்காவது பாகம். மூன்றாவது பாகத்தைத் தொடர்ந்து உங்களுக்காக உரையாடுகிறார்கள், MS-இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆதவன் சிபி மதிவாணன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஸ்ரீகாந்த் !

குறிப்பாக இந்த உரையாடல் Pre graduation Curricular Practical Training எனப்படும் பட்டப் படிப்புக்கு ஊடாக மேற்கொள்ளும் 'கல்வித்திட்ட செய்முறைப் பயிற்சி' பற்றியது.

CPT-க்கான பல்வகை வாய்ப்புகள், சில எளிய ஆலோசனைகள் என விரிகிறது உரையாடல்.

முதுகலை மாணவர்களில் தாம் பயிலும் துறையில் ஏற்கனவே நிறைய பணியனுபவம் உள்ளவர்கள், வேறு துறையில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் எந்த பணி அனுபவமும் இல்லாதவர்கள் என்ற மூன்று வகையினர் இருக்கலாம்.

மூன்று வகையினருக்குமே பொருத்தமான வழி, Internship எனப்படும் 'உள்ளிருப்புப் பயிற்சி'. அமெரிக்கத் தொழில் பண்பாட்டை உள்வாங்கிக் கொள்ள முழுநேரபணியின் இயற்கையைப் புரிந்துகொள்ள Internship ஓரு அருமையான வாய்ப்பு !

அமெரிக்காவில் ஒரு வெளிநாட்டு பட்டதாரி மாணவராக தாக்குப்பிடிப்பதிலுள்ள நெளிவு சுளிவுகளை நுணுக்கங்களை கொஞ்சம் ஆழமாகப் பேசுவோம்.